ஐபோன் விற்பனை சரிவு – ஊழியர்களுக்கு கடிதம் எழுதிய டிம் குக்

Please log in or register to like posts.
News

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை சரிந்துள்ளதைத் தொடர்ந்து ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். #Apple #TimCook

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு, உலகம் முழுக்க விற்பனை  செய்யப்படுகிறது. 

அறிமுகமானது முதல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலக்கட்டங்களில் புதிய ஐபோன் மாடல்களின் விற்பனை சரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் கடந்த இரு தசாப்தங்களில் இல்லாத அளவு, தனது வருவாய் லாப கணிப்பை முதல் முறையாக குறைத்துள்ளது.

ஐபோன் விற்பனை குறைந்தபோதிலும், ஆப்பிள் நிறுவனத்தின் சேவைகள், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் மேக் வியாபாரம் புதிய சாதனையை எட்டியுள்ளது.

இந்நிலையில் ஐபோன் விற்பனை சரிவை தொடர்ந்து ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆப்பிள் முதலீட்டாளர்களுக்கு ஆப்பிள் சார்பில் எழுதப்பட்டிருக்கும் கடிதத்தில் விடுமுறை காலாண்டு வாக்கில் ஆப்பிள் வருவாய் கணிப்பு மாற்றப்படுவதாக தெரிவித்திருக்கிறோம். இதற்கு முக்கிய காரணம் ஐபோன்களின் விற்பனை சரிந்தது தான், குறிப்பாக சீனாவில் ஐபோன் விற்பனை குறைந்திருக்கிறது.

காலாண்டில் வருவாய் கணிப்பு குறைந்திருப்பது பின்னடைவாக இருந்தாலும், நமது சேவைகள், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் மேக் வணிகம் மூலம்  வரலாற்று சிறப்புமிக்க வருவாய் கிடைத்திருக்கிறது. ஐபேட் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இருமடங்கு அதிகரித்து இருக்கிறது.

இதேபோன்று ஐபோன் ஆக்டிவேஷன்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் கிறிஸ்துமஸ் தின சாதனையை முறியடித்திருக்கிறது. இதேபோன்று அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, மேற்கு ஐரோப்பா, ஜெர்மனி, இத்தாலி, மற்றும் கொரியா, வியட்நாம் போன்ற ஆசிய பசிபிக் பகுதிகளில் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

புதிய ஐபோன்களின் மூலம் நமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கண்டுபிடிப்புகளால் நாம் பெருமை கொள்ள முடியும். இதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. முதல் காலாண்டில் ஐபோன் விற்பனையில் சாதனை படைக்காததற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

வெளிப்புற சூழல் நமக்கு அழுத்தம் தரலாம், எனினும் அவற்றை நாம் விலக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும் இந்த நிலை மாறும் வரை நாம் காத்திருக்கவும் கூடாது. இந்த சூழல் நாம் கற்றுக் கொள்ளவும், முடிவுகளை எடுக்கவும், நம் பலத்தை ஒன்று திரட்டி ஆப்பிள் குறிக்கோளை நிலைநிறுத்தவும் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் கடந்த காலாண்டு விற்பனை பற்றி விவாதிக்க ஆப்பிள் ஊழியர்களுக்கு டிம் குக் தனது கடிதத்தில் அழைப்பு விடுத்திருக்கிறார்.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *