ஓரினச் சேர்க்கை காணொளி ; 2 ஆவது வீடியோ வெளி வந்தது!

ஷா ஆலம்,ஜூன்.13- ஓரிரு தினங்களாக நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஓரின சேர்க்கை வீடியோ காணொளியில் இருக்கும் நபர் நான் இல்லை என பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி அறிவித்த சில மணி நேரங்களில் அதே போன்று இன்னொரு காணொளியும் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 1 நிமிடம் 29 வினாடிகள் ஓடக் கூடிய  இந்தக் காணொளியிலும் முந்தைய காணொளியில் இருக்கும் ஆடவர்கள் தான் உள்ளனர். அதே அறை சூழ்நிலையில் இவ்விருவரும் ஒரின சேர்க்கை உறவில் ஈடுபடுகின்றனர். இது பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது.

அந்த முதல் காணொளியில் இருப்பது நானும் அஸ்மின் அலியும் தான் என  கூறி மூலத் தொழில்துறை துணை அமைச்சர் சம்சுல் இஸ்கண்டார்  தனிப்பட்ட செயலாளரான முகமட் ஹாஸிக் அப்துல் அஸிஸ் நேற்று அதிகாலை சமூக ஊடகத்தில் வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஓரினச் சேர்க்கை காணொளி ; 2 ஆவது வீடியோ வெளி வந்தது! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *