கஞ்சா,குடுவுடன் இருவர் கைது!!

கஞ்சா மற்றும் குடுவை உடமையில் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 40 கிராம கஞ்சாவை உடமையில் வைத்திருந்த நபரும், பரந்தன் சிவபுரம் பகுதியில் 0.40 மில்லிக்கிராம குடுவை உடமையில் வைத்திருந்த நபரும் கைது செய்யப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்ட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *