கடக ராசி – குரு பெயர்ச்சி பலன்கள் 2018 இருந்து 2019 வரை

மற்றவர் கருத்துக்கு மதிப்பு தரும் கடக ராசி அன்பர்களே!குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடமான துலாமில் இருந்து அக்.4ல் 5-ம் இடமான விருச்சிகத்திற்கு செல்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பொற்காலமாக அமையும். வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். சனிபகவான் 6-ம் இடமான தனுசு ராசியில் நின்று நன்மை தந்து கொண்டிருக்கிறார். முயற்சி வெற்றி பெறும்.பணப்புழக்கம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவீர்கள். ராகு தற்போது உங்கள் ராசியில் இருக்கிறார். இது சுமாரான நிலையே. 2019 பிப். 13ல் ராகு 12-ம் இடமான மிதுனத்திற்கு செல்கிறார். இதுவும் சுமாரான நிலைதான்.தற்போது 7ல் உள்ள கேதுவால் வீண் அலைச்சல் உருவாகலாம். எதிரிகளால் பிரச்னை ஏற்படலாம். உடல் நலம் சுமாராக இருக்கும். 2019 பிப். 13ல் அவர் 6-ம் இடமான தனுசு ராசிக்கு வருகிறார். அங்கு சனியோடு இணைந்து நற்பலன் தருவார். பின்தங்கிய நிலை அடியோடு மறையும். மேலும் பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும்.இனி பொதுவான பலனைக் காணலாம்.குரு குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். தடைபட்ட திருமணம் இனிதே கைகூடும். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். சகோதரர்கள் ஆதரவுடன் செயல்படுவர். 2019 மார்ச் 10க்கு பிறகு பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம். உறவினர் வகையில் அனுகூலம் இருக்காது.பணியாளர்களுக்கு பொன்னான காலகட்டமாக இருக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேறும். அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். விரும்பிய இடம், பணிமாற்றம் பெறலாம். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய வேண்டியதிருக்கும்.வியாபாரிகள் பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவர். உங்கள் ஆற்றல் பன்மடங்கு மேம்பட்டு விளங்கும். தொழில் வளர்முகமாக இருக்கும். பணப்புழக்கம் சேமிக்கும் விதத்தில் மிக அதிகமாக இருக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். புதிய வியாபாரம் நல்ல அனுகூலத்தை கொடுக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். பகைவர் தொல்லை, அரசு வகையில் இருந்த அனுகூலமற்ற போக்கு முதலியன மறையும். 2019 மார்ச் 10-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். சிலர் தொழில் விஷயமாக குடும்பத்தை பிரிய நேரிடலாம்.கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறுவர். அரசு வகையில் பரிசு, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக நலசேவகர்கள் எதிர்பார்த்த பலன் பெறுவர். நீண்டகாலமாக இருந்த நாற்காலி கனவு பலிக்கும். பொது மக்களிடையே நற்பெயர் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பர். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு துணைநிற்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். படித்து முடித்தவர்களுக்கு வேலை கிடைக்கவும் யோகமுண்டு. 2019 மார்ச் 10க்கு பிறகு கூடுதல் அக்கறை தேவைப்படும். விவசாயிகள் மஞ்சள், கேழ்வரகு, சோளம் காய்கறி, பழவகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானத்தை காணலாம். கால்நடை செல்வம் பெருகும். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும்.பெண்களுக்கு மனசு போல சுபநிகழ்ச்சிகள் இனிதே கைகூடும். கணவன் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் மதிப்பு உயரும். புதிதாக திருமணமானவர்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறுவர். பிள்ளைகள் வகையில் இருந்த பிரச்னை மறையும். பொன், பொருள் சேரும். ஆடை, ஆபரணம் வாங்கி குவிப்பர். விருந்து, விழா என சென்று மகிழ்வர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். அதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் அதிக ஆதாயம் காண்பர். வங்கி கடன் மூலம் விரிவாக்கம் செய்ய வாய்ப்புண்டு. உடல்நிலை சிறப்பாக இருக்கும். கேதுவால் அவ்வப்போது பாதிப்பு வந்தாலும் நொடிப்பொழுதில் மறைந்துவிடும்.பரிகாரம்:வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலைசனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனைஅஷ்டமியன்று பைரவருக்கு நெய் விளக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *