கடற்கரையை பார்வையிட சென்றவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

களனி – ருமஸ்சல பகுதியில் கடற்கரையை பார்வையிட வந்தவர்களில் பெண்ணொருவர் உட்பட இருவர் கடலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். பின் பெண் சடலமாக மீட்கப்பட்டதுடன், ஆண் காணாமல் போயுள்ளார்.

ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உனவடுன பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்கரையை பார்வையிடுவதற்காக சென்ற ஐவரில் இருவரே இவ்வாறு கடலலையால் இழுத்துச் செல்லப்பட்டனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

மஹரகம – தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன் போது பிலான – தல்கஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த நபரொருவர் காணாமல் போயுள்ளதுடன் அவரை குறித்து தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்றய தினம் கடற்கரையை பார்வையிடுவதற்கு வந்தவர்கள், பாறையொன்றிலிருந்து புகைப்படம் எடுத்துள்ளனர். இதன்போதே இவர்கள் இவ்வாறு அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போயுள்ள நபரை தேடும் நடவடிக்கைகளை பொலிஸாரும் கடற்படையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *