கடலுக்கடியில் நரகம், தப்பிப்பார்களா வீரர்கள்? – பெர்முடா விமர்சனம்

நிக் லயான் இயக்கத்தில் ட்ரவர் டோனோவன் – ம்யா – லிண்டா ஹேமில்டன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `பெர்முடா’ படத்தின்
விமர்சனம். #2014RudramReview #BermudaTentaclesReview #TrevorDonovan #LindaHamilton

அமெரிக்க அதிபர் செல்லும் விமானம் கடலுக்கு மேல் செல்லும் போது பருவநிலை மாற்றம் காரணமாக விபத்தில் சிக்குகிறது. இதையடுத்து விமானத்தில் இருக்கும் பாதுகாப்பு பெட்டகம் மூலம் அதிபரை மட்டும் தப்பிக்க வைக்கின்றனர். அந்த பெட்டகம் நேராக கடலில் சென்று விழுகிறது. இந்த தகவல் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு தெரிவிக்கப்பட்டு அதிபரை தேடும் பணி தீவிரப்படுத்தப்படுகிறது.

அமெரிக்க கப்பல் படையின் அட்மிரல் லிண்டா ஹேமில்டன். அவரது அறிவுறுத்தலின் பேரில் நாயகன் ட்ரவர் டோனாவன் தலையிலான குழு அதிபரை காப்பாற்ற கடலுக்கு அடியில் செல்ல தயாராகிறது. இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் வித்தாசமான ஜந்து போன்ற வால்கள் மனிதர்கள் இருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.

இதற்கிடையே கடலுக்கிடையில் நரகம் போன்ற ஒரு இடத்தில் இருந்து அதிபரை காப்பாற்றி கூட்டிவருகின்றனர். இதில் ட்ரவர் டோனாவன் குழுவினர் உயிர்தியாகம் செய்கின்றனர்.

அதிபரை அழைத்துக் கொண்டு கப்பல்தளத்திற்கு வருவதற்குள் அமெரிக்க கப்பல் படையில் பாதி அழிந்துவிடுகிறது. மேலும் தாக்குதல் நடத்துவது மிருகமா அல்லது வேறு எதுவுமா என்று தெரியாமல் மொத்த படையும் தவித்து வர, அந்த ராட்சத மிருகம் முழுவதும் கடலினுள் இருந்து மேலெழுகிறது.

அந்த மிருகத்தை அழிக்க ட்ரவர் ஒரு ஹெலிகாப்டரில் செல்கிறார். இதற்கிடையே ட்ரவருக்கும், ம்யாவுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது.

கடைசியில், ட்ரவர் அந்த மிருகத்தை அழித்தாரா? ம்யாவுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ட்ரவர் டோனோவன் கதாபாத்திரம் ஹீரோயிசம் காட்டும்படியாக அமைந்திருக்கிறது. ஹிரோ என்பதால் அவரால் எதையும் செய்ய முடியும் என்ற தோற்றத்தை உருவாக்குகிறது. ம்யா பொறுப்புடன் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். லிண்டா ஹேமில்டன் அட்மிரல் கதாபாத்திரத்தற்கு கச்சிதமாக பொறுந்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.

நிக் லயான் இயக்கத்தில் இதுஒரு புதுமையான முயற்சி என்றே கூறலாம். படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் ஜந்து போன்ற தோற்றத்தை வைத்தே படத்தை முடித்துவிட்டார். மற்றவர்களுக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் எதுவும் இல்லை. திரைக்கதையில் விறுவிறுப்பு இருந்தாலும், ஜந்து போன்ற ஒன்று அங்கே எப்படி வந்தது. அது எப்படி செயல்படுகிறது என்பது போன்றவை ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

கிறிஸ் ரிடென்ஹரின் இசையில் பின்னணி இசை படத்திற்கு படத்திற்கு பலம் தான். அலெக்சாண்டர் எல்லனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

மொத்தத்தில் `பெர்முடா’ த்ரில் பயணம். #BermudaTentaclesReview #TrevorDonovan #LindaHamilton

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *