கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த பெண்…!

பீகார் மாநிலத்தில் காதல் தோல்வியால் கடிதம் எழுதிவைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த ராமகாந்த் பிரசாத் மகாடோ என்பவரின் மகள் சரிதா குமாரி (18). இவர் இன்று காலை தன்னுடைய வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், சரிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அந்த அறையில் சோதனை மேற்கொண்ட போது அவர் எழுதிவைத்திருந்த கடிதம் பொலிசாரின் கையில் சிக்கியது. அந்த கடிதத்தின் மூலம் காதல் தோல்வியால் சரிதா தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *