Connect with us

India

கத்திரி வெயிலுக்கு, உற்சாகக் குளியல் போடும் இளைஞர்கள்

ஓமலூரில் கத்திரி வெயிலை சமாளிக்க அந்தக் கிராமத்தில் உள்ள இளைஞர் கிணறு, கண்மாய்களில் குளித்து மகிழ்கின்றனர்.

தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கத்திரி வெயில் சுட்டெரித்து வருகிறது. கத்திரி வெயிலை சமாளிக்க மக்கள் பல்வேறு வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காமலாபுரம், தாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் நீர்நிலைகளில் ஆனந்தமாக குதித்து மகிழ்ந்து வருகின்றனர். 

அத்துடன் கிராமப்புற இளைஞர்கள், சிறுவர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்து வருகின்றனர். இருப்பினும் அப்பகுதி மக்கள் அவர்களை கவனுத்துடன் குளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

நன்கு நீச்சல் தெரிந்தவர்களுடன் மட்டுமே, சிறுவர்கள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். கத்திரி வெயிலில் இந்தக் குளியல், காண்போருக்கும் குளிர்ச்சியான எண்ணங்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
 

More in India

To Top
error: Content is protected !!