கனடாவிற்கான அமெரிக்க தூதுவருக்கு கொலை அச்சுறுத்தல்

Please log in or register to like posts.
News

Kelly-Knight-Craftகனடாவிற்கான அமெரிக்கத் தூதுவர் ஹெல்லி க்நைட் கிராப்ட் (Kelly Knight Craft) க்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமான வெள்ளைப் பவுடர் போன்ற பொருளொன்று ஒட்டாவா நகரிலுள்ள அவரின் வதிவிடத்திற்கு அனுப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதொடு இதுகுறித்து அமெரிக்க மற்றும் கனேடிய சட்ட அமுலாக்கப் பிரிவு புலன்விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.

தீயணைப்பு, ஆர்.சி.எம்.பி மற்றும் அபாயகரமான பொருட்கள் அணி வரவழைக்கப்பட்டு அப்பகுதியை சுற்றி பாதுகாப்பு வலயமிடப்பட்டதுடன். பொருள் தீங்கற்றதென கண்டறியப்பட்டது.

குறித்த பவுடர் பொதியுடன் தூதுவர் தனது பதவியை இராஜினாமா செய்யாவிட்டால் கொலை செய்யப்படுவார் என்ற மிரட்டல் கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அச்சுறுத்தல் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் கியுபெக்கிலிருந்து அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அண்மையில் கனடிய அலுமினியம் மற்றும் உருக்கு இரும்பு போன்றனவற்றிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சுங்க வரிகளை விதித்தார். அதேவேளை கனடிய பிரதமருக்கெதிராக தனிப்பட்ட விமர்சனங்களும் மேற்கொள்ளப்பட்டது.

இவ்விவகாரங்களினால் கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *