கனடாவிலிருந்து தாய்நாடு வந்த பெண்ணுக்கு இப்படி பிரச்சனையா?

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சொந்த பிரச்சனைகளை பகிர்ந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

பொதுவாக அனைவருக்கும் தனக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை நண்பர்கள் யாரிடமாவது பேசி அதற்கு நல்ல தீர்வு காண்பது வழக்கமாக இருந்தது.

ஆனால் தற்போது யாருக்கும் யாரிடமும் பேச நேரமின்மை காரணமாக சமூகவலை தளங்களில் அது போன்ற விஷயங்களை கொட்டி தீர்த்து பிரச்சனையை வாங்கி கொள்கின்றனர். அதுபோன்ற நிகழ்வு நாமக்கல் மாவட்டத்தில் நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கனடா நாட்டில் பணி நிமிர்த்தமாக தங்கி உள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு உறவினர்களை காண சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.

ஆனால் வந்த இடத்தில் உறவினர்களுடன் சிறிய மன கசப்பு ஏற்படவே, அவர்கள் யாரும் இந்த பெண்ணிடம் பேசாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் தனது மன வருத்தத்தை யாரிடம் கொட்டி தீர்ப்பது என்று தெரியாத அந்த பெண், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை அடுத்து அவரின் பேஸ்புக் நண்பர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி உள்ளனர். தொடர்ந்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணையும் பெற்றுள்ளனர். இதனால் அந்த பெண்ணுக்கும் பேஸ்புக் நண்பர்களுக்கும் இடையேயான நட்பு இன்னும் நெருக்கமாகி உள்ளது.

மேலும் அவருக்கு இதன் மூலம் உளவியல் பயிற்சி அளிக்கும் நண்பர்கள் கிடைத்துள்ளனர். அவர்களை தேடி அங்கு சென்ற அவர் பின்னர் தான் தன் குழந்தைகள் நினைவு ஏற்பட்டு வீடு திரும்பி உள்ளார்.

இந்நிலையில் இதை பார்த்த கணவன் அப்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை உணர்ந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

இதற்கிடயே மருத்துவமனைக்கு வந்த ஒரு பேஸ்புக் நண்பர் ஒருவர் மயக்க நிலையில் இருந்த பெண்ணிடம் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் அந்த பெண்ணின் வீட்டில் அவரை அடைத்து வைத்திருப்பதாக குறிப்பிட்டு அந்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

விபரீதம் தலைக்கு ஏறிபோன நிலையில், அந்த வீடியோ கனடா தூதரக அதிகாரிகள் உள்பட பல்வேறு நபர்கள் பார்த்து அந்த பெண்ணுக்கு ஆதரவு கொடுப்பதாக பல்வேறு நபர்களும் அலைபேசியில் அழைத்து வருகின்றனர்.

ஆனால் இந்த இந்நிகழ்வு எதுவும் அந்த பெண்ணுக்கு தெரிவிக்காமல் மீட்டு கொண்டு வர பெற்றோரும் கணவரும் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் உறவினர்தரப்பில் கூறியது, தற்போது பெண் குணமடைந்து வருகிறார். ஆனால் அவரால், பல அழைப்புகள் தினமும் மருத்துவமனைக்கும் எங்களுக்கும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பேஸ்புக்கில் உள்ள வீடியோ பெரிய தலைவலியாக உள்ளது என்று கூறினர்.

எது எப்படியும் அந்த வீடியோ எத்தனை நாள் பேஸ்புக்-யில் வலம் வருகின்றதோ அத்தனைநாளும் வீட்டாருக்கு பிரச்சனைதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *