கனடாவில் பரிதாபமாக உயிரிழந்த இந்திய இளம் பெண் உள்ளிட்ட மூவர்…! விசாரணையில் வெளியான தகவல்..!!

கனடாவில் நடந்த கார் விபத்தில் இளம் பெண் உள்ளிட்ட மூன்று இந்தியர்கள் உயிரிழந்த நிலையில் மூவரும் கார் பயணத்தின் போது சீட் பெல்ட் அணியவில்லை என தெரியவந்துள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தன்வீர் சிங், குர்விந்தர் சிங், ஹர்பிரீத் கவுர் ஆகிய மூவரும் கனடாவின் ஒன்றாறியோவில் உள்ள கல்லூரியில் படித்து வந்தனர்.

மூவரும் கடந்த ஏப்ரலில் தான் கணினி தொடர்பான தொழில்நுட்ப வகுப்பில் சேர்ந்தனர்.இந்நிலையில் மூவரும் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு உள்ளூர் நேரப்படி 1.30 மணிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது கட்டுபாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.சம்பவத்துக்கு பின்னர் கார் ஓட்டுனர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

இந்த விபத்து தொடர்பான விசாரணையில் காரில் பயணித்த மூன்று பேரும் சீட் பெல்ட் அணியவில்லை என தெரியவந்துள்ளது.

இதனிடையில் அங்குள்ள சீக்கிய சமூகத்தின் உறுப்பினர் ஹர்ஜிந்தர் சிங் கூறுகையில், மூன்று பேரின் மரணம் எங்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் நல்ல வாழ்க்கையை அமைத்து கொண்டு வருமானம் ஈட்ட தான் அவர்கள் கனடாவுக்கு வந்தார்கள்.

மூவரின் மரணம் அவர்கள் பெற்றோருக்கு மட்டும் அதிர்ச்சியை கொடுக்கவில்லை, உடனிருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பெரிய இழப்பிலிருந்து மீண்டு வருவது கடினமாகும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை தற்போது செய்வதே எங்கள் முதல் கடமையாகும் என கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *