கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்த பிரதமர் மோடி

ஆசிரியர் – Editor II

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி இன்று சந்தித்துள்ளார்.

தனது குடும்பத்தினருடன் ஒரு வார கால சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் தாஜ்மஹால், சபர்மதி ஆசிரமம், அமிர்தசரஸ் பொற்கோயில் உட்பட பல இடங்களை சுற்றிப்பார்த்தார்.

மற்ற நாட்டு தலைவர்களுக்கு வழங்கும் மரியாதையைப் போன்று கனடா பிரதமருக்கு வழங்கவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இன்று மோடி கனடா பிரதமரை சந்தித்துள்ளார்.

இதற்கு முன்பாக அவர் வெளியிட்ட பதிவில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நாளை (இன்று) சந்தித்து பேசுவதை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன். குறிப்பாக அவரது குழந்தைகளை சந்திக்க மிகுந்த ஆவலாக உள்ளேன். இந்தியா – கனடா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக ட்ரூடோவுடன் பேச உள்ளேன் என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 2015ம் ஆண்டு கனடாவுக்கு பயணம் மேற்கொண்ட போது எடுத்த புகைப்படத்தையும் ஷேர் செய்திருந்தார்.

She remembers it well, @narendramodi! It’s been great to visit so far – we’ll see you today. ???????????????? https://t.co/5C2CgLOW6n

— Justin Trudeau (@JustinTrudeau) February 23, 2018

I hope PM @JustinTrudeau and his family had a very enjoyable stay so far. I particularly look forward to meeting his children Xavier, Ella-Grace, and Hadrien. Here is a picture from my 2015 Canada visit, when I’d met PM Trudeau and Ella-Grace. pic.twitter.com/Ox0M8EL46x

— Narendra Modi (@narendramodi) February 22, 2018

Loading...