கனடா பிரதமர் மீதான விமர்சனம் – மன்னிப்பு கோரிய அமெரிக்கா

peterகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த பீட்டர் நவரோ மன்னிப்பு கோரியுள்ளார்.

உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு அமெரிக்கா வரி விதித்துள்ளதால், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த மாதம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கனடா பிரதமர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக நடந்துகொள்ளும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, ‘நரகத்தில் சிறப்பு இடம் கிடைக்கும்’ என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில் பீட்டர் நவரோ முன்வைத்த விமர்சனத்திற்கு மன்னிப்பைக் கோரியுள்ள நிலையில், குறித்த விடையம் தொடர்பிலும், அவரது மன்னிப்பு தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் ஜஸ்டின் ட்ரூடோ.