கனடா வாகன சாரதிகள் கவனத்திற்கு …

மொன்ட்ரியல், கியூபெக், கனடா என்பவற்றை இணைக்கும் புதிய வீதி கட்டமைப்புக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ளது.

குறித்த வீதிகளின் ஊடாக பொதுமக்கள் தமது பிரதேசங்களுக்கு செல்லக்கூடியதான இலகுவான பாதை அமைப்பாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நெடுஞ்சாலை 15 இல் வடக்கு நோக்கிச் செல்லும் சாரதிகள் இந்த பாதையை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பரிமாற்றத்தின் பிரதான சீரமைவானது கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு முடிவடைந்துள்ளது. எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு முழுமையாக கட்டுமான பணிகள் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.