கற்றாளை செய்கை இராஜாங்க அமைச்சர் அமீர் அலியால் ஆரம்பிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய சமூகம் கற்றாளை செய்கையை மேற்கொண்டால் எதிர்வரும் வருடத்தில் விவசாய அமைச்சின் மூலம் உதவிகளை வழங்குவதற்கு தயாராக உள்ளோம் என விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி காவத்தமுனை கக்கரிமடு பிரதேசத்தில் கற்றாளை செய்கையின் ஆரம்ப நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

மக்களுடைய வாழ்வாதாரம் சிறப்பாக இருக்கும் என்ற காரணத்தினால் தான் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேசசங்களிலும் செய்கை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். கற்றாளை செய்கை குருநாகல் மற்றும் அனுராதபுர மாவட்டத்தில் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் ஒரு பிரபல்யமான செய்கையாக, இலாபம் ஈட்டக் கூடிய செய்கையாக இருந்து கொண்டிருக்கின்றது.

கற்றாளை செய்கையை எல்லோரும் மேற்கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் விசேடமாக விவசாய சமூகம் இதனை செய்வார்களாக இருந்தால் பாரிய உதவிகளை எதிர்வரும் வருடத்தில் விவசாய அமைச்சின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்து தருவதற்கு தயாராக உள்ளோம்.

கற்றாளை பயிர்ச் செய்கையை முதலில் சகோதரர் முஹம்மட் ஆரம்பித்துள்ளார். இவ் பயிர்ச்செய்கைக்கு எதிர்காலத்தில் எமது விவசாய அமைச்சின் மூலமாக பல ஊக்குவிப்புக்களை செய்வதற்கு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குருநாகல் மற்றும் அனுராதபுர மாவட்டத்தில் பத்தாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கற்றாளை செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2000 ஏக்கருக்கு மேல் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கற்றாளை செய்கையின் தோட்ட உரிமையாளர் எஸ்.முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஜௌபர், எம்.அமீர், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.எஸ்.றுவைத், பிரத்தியேக செயலாளர் எம்.தௌபீக், மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். (கு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *