கலைஞர் கருணாநிதி காலமானார்… கண்ணீர் கடலில் மூழ்கிய ஒட்டுமொத்த தமிழகம்

Please log in or register to like posts.
News

தமிகழத்தின் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி வயதுமூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இன்று காலை முதல் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வந்த நிலையில் 4.30 மணியளவில் 7வது அறிக்கையை காவேரி மருத்துவமனை வெளியிட்டது. இதனால் மேலும் தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீருடன் காணப்பட்டனர்.

கடந்த 95 ஆண்டுகளாக பல போராட்டங்களை சந்தித்த கருணாநிதி இறக்கும் வரையிலும் போராடிக் கொண்டு தான் இருந்துள்ளனர். இவரது மரண செய்தியைக் கேட்ட தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் சிந்தி கதறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *