களவாக மணல் ஏற்றியவருக்கு தண்டம்!!

அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற வாகனச் சாரதிக்கு யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிமன்றில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

சாவகச்சேரி பொலிஸார், வாகனச் சாரதிக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கு விசாரணையில் சாரதி குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து தண்டம் விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *