கள்ளக்காதல் பிரச்சனையை குடும்பத்துடன் பேசி தீர்க்க சென்ற இடத்தில் நேர்ந்த துயரம்.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் இருக்கும் பாகேபள்ளி சார்ந்தவர் ஸ்ரீனிவாஸ் (வயது 30)., இவரது மனைவியின் பெயர் பிரதீபா (வயது 28). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட சூழ்நிலையில்., இருவருக்கும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் இருவரும் அங்குள்ள பெங்களூரு பகுதியில் இருக்கும் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில்., இவர்களின் இல்லத்திற்கு அருகிலேயே பாலகிருஷ்ணன் என்ற 28 வயதுடையை நபர்., தனது மனைவியான லட்சுமி தேவியுடன் வசித்து வருகிறார். இந்த நேரத்தில்., பால கிருஷ்ணனுக்கும் – ஸ்ரீனிவாசின் மனைவி பிரதீபாவிற்கும் இடையே பழக்கமானது ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறவே இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தவறான பழக்கமானது ஸ்ரீநிவாஸிற்கு தெரியவரவே., கள்ளக்காதலை கைவிடக்கூறி மனைவியிடம் முறையிட்டுள்ளார். இவர்கள் இருவரும் தங்களுக்கு இடையேயான கள்ளக்காதல் தொடர்பை கைவிட மறுத்துள்ளனர். இதன் காரணமாக இவர்கள் இருவரின் குடும்பத்திற்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த சமயத்தில் கடந்த 11 ஆம் தேதியன்று இருவரின் குடும்பத்தாரும் பிரச்சனையை பேசி தீர்ப்பதற்கு முடிவு செய்து., அங்குள்ள சூர்யா நகர் பகுதிக்கு சென்ற நிலையில்., இவர்களுக்குள் நடந்த தகராறு வாக்குவாதமாக முற்றவே., ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணா கத்தியால் ஸ்ரீனிவாசனின் கழுத்தை அறுத்து கூழை செய்துள்ளார். இந்த தகவல் குறித்து யாரிடமும் கூறினால் உன்னையும் கொலை செய்து விடுவேன் என்று தனது மனைவியையும் மிரட்டியுள்ளார்.

இதற்கு பின்னர் மூவரும் சேர்ந்து ஸ்ரீனிவாசனின் உடலை கைப்பற்றி அங்குள்ள ஏரியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில்., வீட்டை காலி செய்வதாக கூறி வீட்டின் உரிமையாளரிடம் வழங்கிய முன்தொகை பணத்தை ஸ்ரீனிவாசின் மனைவி கேட்கவே., ஸ்ரீநிவாஸ் எங்கே என்ற கேள்வியை முன்வைத்துள்ளார். இதற்கு அவர் முன்னுக்கு பின்னர் முரணாக பதிலளிக்கவே., அவரின் மீது சந்தேகம் கொண்டுள்ளார்.

இந்த நேரத்தில்., பாலகிருஷ்ணனின் மனைவியான லட்சுமி தேவி., ஸ்ரீனிவாசனின் கொலை குறித்து ப்ரதீபாவின் வீட்டு உரிமையாளரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., பிரதீபா மற்றும் அவருடைய கள்ளக்காதலன் பாலகிருஷ்ணாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *