கவனக் குறைவினால் ஜோகூர் சுல்தானிடம் கை குலுக்கவில்லை! -மன்னிப்பு கோரிய முக்ரீஸ்

அலோர்ஸ்டார்,மே.24- ஜொகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம்முடன் கை குலுக்காத சம்பவம் குறித்து கெடா மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ முக்ரீஸ் மகாதீர் மன்னிப்பு கோரியுள்ளதாக  மாநில அரசு அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பகாங் மாநில முன்னாள் ஆட்சியாளர் சுல்தான் அகமட் ஷாவின் இறுதி சடங்கில் சுல்தான் இப்ராஹிமுடன் டத்தோஶ்ரீ முக்ரிஸ் மகாதீர்  கை குலுக்க

மல் கடந்து சென்ற காணொளி தற்பொழுது சமூக வலைத் தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றது.

சுமார் 14 வினாடிகள் ஓடக்கூடிய இந்த காணொளியை ஜொகூர் இளவரசர் துங்கு இஸ்மாயிலும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவரின் செயலுக்கு ஜொகூர் மாநில அம்னோ இளைஞர் பிரிவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இவ்விவகாரம் டத்தோஶ்ரீ முக்ரீஸின் கவனக் குறைவினால் மட்டுமே நிகழ்ந்துள்ளதே தவிர அது கெடா மக்களின் மரியாதை தன்மையை பிரதிபலிக்கவில்லை. இது தொடர்பில் மன்னிப்பு கோரி அவர் ஜொகூர் மாநில ஆட்சியாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என டத்தோஶ்ரீ முக்ரீஸின் பத்திரிக்கை செயலாளர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

The post கவனக் குறைவினால் ஜோகூர் சுல்தானிடம் கை குலுக்கவில்லை! -மன்னிப்பு கோரிய முக்ரீஸ் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *