காதலனை அழைத்து பேசிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி…

தமிழகத்தில் காதலனால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் வழக்கில், அதிரடி திருப்பாக அவரது உறவினர்களே அந்த பெண்ணை கொலை செய்து நாடகமாடியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமத்தை அடுத்த டி.வல்லக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மாயாண்டி.

இவருக்கு ராதிகா என்ற 22 வயது மகள் உள்ளார். ராதிகாவிற்கும், பார்த்திபனூர் அருகே உள்ள பிச்சப்பனேந்தல் கிராமத்தை சேர்ந்த அருண்குமார்(30) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இருப்பினும் இரண்டு பேருக்கும் அடிக்கடி பிரச்சனை வந்ததால், ராதிகா கணவனை விட்டு பிரிந்து தனது தாய் விட்டில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்துள்ளார்.

அப்போது தான் ராதிகாவிற்கும், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்த தகவல் ராதிகாவின் குடும்பத்தினருக்கு தெரியவர, அவர்கள் கண்டித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 29-ஆம் திகதி ராதிகா வீட்டின் அருகே இருக்கும் கண்மாயில் உடல் கருகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், விரைந்து வந்த பொலிசார் ராதிகா தீக்குளித்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்த போது,

காதலன் கருப்பசாமிதான் ராதிகாவை கொன்றிருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். அதுமட்மின்றி,

அரசின் நிதி உதவி கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுவரை ராதிகாவின் உடலை வாங்கவும் மறுத்துவிட்டனர்.

இந்த போராட்டம் தொடர்ந்து 6 நாட்கள் நடந்த நிலையில், ராதிகாவின் மரணத்துக்கு அரசு நிவாரணமாக 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதில் முதல் தவணையாக 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாயை அவரது குடும்பத்தினரிடம் அதிகாரிகள் வழங்கினர். அதன் பின்னர் ராதிகாவின் உடலை வாங்கிச்சென்று அடக்கம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து இது குறித்து பொலிசார் மேற்கொண்டு வந்த தொடர் விசாரணையில், கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரத்தில் ராதிகாவை அவருடைய உறவினர்கள் அடித்து கொடூரமாக கொன்றுவிட்டு, உடலை கண்மாய் கரையில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்து எரித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், சம்பவ தினத்தன்று ராதிகா, தன்னுடைய காதலனான கருப்பசாமியை சந்தித்து பேசியுள்ளார்.

இதைக் கண்ட உறவினரான முருகன் மற்றும் சிலர் கண்டித்துள்ளனர். ஆனால் ராதிகாவோ நான் தான் வரச் சொன்னேன் என்று அவர்கள் மனம் நோகும் படி பேசவே, ஆத்திரமடைந் முருகன், அவருடைய தாயார் பாப்பா மற்றும் மோகன், அழகர்சாமி ஆகியோர், ராதிகா வீட்டு வாசலில் ஒரு சிறுவனை காவலுக்கு வைத்துவிட்டு உள்ளே சென்று ராதிகாவை பலமாக தாக்கி சுவரில் மோதவைத்து கொலை செய்துவிட்டு, உடலை அருகில் உள்ள வீட்டிற்குள் மறைத்து வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *