காதலரின் சம்மதத்தை எதிர்பார்க்கும் நடிகை

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வரும் அந்த நடிகை கதை தேர்வில் தனது காதலரின் சம்மதத்தை வைத்தே படத்தை தேர்வு செய்கிறாராம். #Gossip

தமிழ், தெலுங்கு சினிமாவில் முதல் இடத்தில் இருக்கும் நடிகை கதை தேர்வுகளில் கவனமாக செயல்பட்டு வருகிறாராம். அவரது நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதாம். 

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகவும், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கிறாராம். நாயகியின் சம்பளமும் ரூ.5 கோடிக்கு உயர்ந்திருக்கிறதாம்.

சமீபத்தில் விலை உயர்ந்த கார் ஒன்நை வாங்கிய நடிகை, அந்த காரில் இயக்குநரான தனது காதலருடன் சென்னையை சுற்றி வந்தாராம். நடிகையின் கதை தேர்வு தான் அவரது வெற்றிக்கு காரணம் என்று கூறுகிறார்களாம். அப்படி இருக்க நடிகை ஒப்புக்கொள்ளும் படங்களுக்கு நடிகையின் காதலர் தான் கதை கேட்கிறாராம். காதலருக்கு பிடித்திருந்தால் மட்டுமே படத்தில் நடிக்க நாயகி ஒப்புக்கொள்கிறாராம். #Gossip

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *