காதலியை திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலன்!

சென்னை பூந்தமல்லி அருகே திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கு எடுக்குமாறு இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை பம்மல் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்கிற இளைஞர் பூந்தமல்லியை சேர்ந்த லத்திபா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை காட்டிய அரவிந்த், கடந்த 2017ம் ஆண்டு லத்திபாவை கர்ப்பமடைய வைத்துள்ளார்.

இதனை அறிந்த அரவிந்த் வீட்டார் திருமணம் செய்துவைக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அரவிந்திற்கும், லத்திபாவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் அரவிந்த் தாக்கியதில் லத்திபாவிற்கு கருகலைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் பிரிந்துள்ளனர்.

பின்னர் சில மாதங்கள் கழித்து மீண்டும் லத்திபாவை சந்தித்த அரவிந்த், திருமணம் செய்துகொள்வதாக ஆசை
வார்த்தை காட்டியுள்ளார். இதில் மயங்கிய லத்திபா மீண்டும் கர்பமடைந்துள்ளார்.

அதேபோல அரவிந்த் மறுபடியும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த லத்திபா பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு வந்த லத்திபா, அரவிந்திற்கு சாதகமாக பொலிஸார் செயல்படுகின்றனர் எனக்கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பொலிஸார் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதிகூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *