காதலுக்கும், குடும்பத்துக்கும் இடையே நடக்கும் போராட்டம் – பிரான்மலை விமர்சனம்

அகரம் கமுரா இயக்கத்தில் ஆதவா பாண்டியன் – நேகா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பிரான்மலை’ படத்தின் விமர்சனம். #Piranmalai #PiranmalaiReview #AathavaPandian #Neha

பிரான்மலையில் வசித்து வருகிறார் நாயகன் ஆதவா பாண்டியன். சிறு வயதிலேயே அம்மாவை இழந்ததால், அப்பா வேல ராமமூர்த்தியின் வளர்ப்பில் வளர்கிறார். வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதித்து வரும் வேல ராமமூர்த்தி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.

ஆனால் ஆதவா பாண்டியன் இதையெல்லாம் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். பெற்றோரை இழந்து ஆசரமத்தில் வளர்ந்து வருகிறார் நாயகி நேகா. ஒருநாள் ரோட்டில் ஆதரவின்றி இருக்கும் பெரியவர் ஒருவரை குளிப்பாட்டி தயார் செய்து விடும் நேகா மீது ஆதவா பாண்டியனுக்கு காதல் வருகிறது. 

இந்த நிலையில், ஊருக்குள் ஆதவா பாண்டியன் செய்யும் சேட்டைகள் அதிகமாவதால் அவரை வெளியூரில் சென்று வேலை பார்க்கும்படி அனுப்பி வைக்கிறார் வேல ராமமூர்த்தி. இதையடுத்து கோயமுத்தூர் செல்லும் ஆதவா, தனது நண்பன் பிளாக் பாண்டியுடன் தங்குகிறார். மேலும் கோவையில் நாயகியை பார்த்துவிடுகிறார்.

ஒரு கட்டத்தில் ஆதவா – நேகா இருவருக்கும் இடையே காதல் வளர்கிறது. விடுதியில் ஏற்படும் ஒரு பிரச்சனையால், பாதிரியார் ஒருவரின் ஆலோசனையில் பேரில் வீட்டிற்கு தெரியாமல் நேகாவை, ஆதவா திருமணம் செய்து கொள்கிறார். அதேநேரத்தில் வேல ராமமூர்த்தி வேறு உறவுக்கார பெண்ணை பார்த்து வைக்கிறார்.

கடைசியில், தனது மகன், மருமகளை வேல ராம மூர்த்தி ஏற்றுக் கொண்டாரா? ஆதவா – நேகாவின் வாழ்க்கை என்னவானது? என்பதே படத்தின் மீதிக்கதை.

முதல் படம் என்றாலும் ஆதவா பாண்டியனின் நடிப்பு குறைசொல்லும்படியாக இல்லை. கதைக்கு தேவையான நடிப்பை ஆர்ப்பாட்டமில்லாமல் கொடுத்திருக்கிறார். நேகா கிறிஸ்த்துவ சமயத்து பெண்ணாக கதையோடு ஒன்றி, சிறப்பாக நடித்திருக்கிறார். வேல ராமமூர்த்தி மிடுக்கான தோற்றத்தில் வந்தாலும், சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை. எனினும் கொடுத்த கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி காமெடி பெரிதாக எடுபடவில்லை.

பாரதி பாஸ்கரின் இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இருக்கிறது. எஸ்.மூர்த்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

மொத்தத்தில் `பிரான்மலை’ செல்லலாம். #Piranmalai #PiranmalaiReview #AathavaPandian #Neha

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *