ஷாஆலாம், ஏப்ரல்.16- 14-ஆவது பொதுத்தேர்தலில் காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி கூட்டணியின் சார்பில் மீண்டும்  மஇகா வேட்பாளராக  டத்தோஶ்ரீ எஸ்.கே. தேவமணி போட்டியிடக் கூடும் என்று தகவல் கூறுகிறது.

மேரு, செமெந்தா மற்றும் செலாட் கிள்ளான் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அம்னோ வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று சிலதரப்புக்கள் கூறுகின்றன. 

காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில், மஇகாவின் துணைத் தலைவரும் பிரதமர் துறை துணையமைச்சருமான  டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி  போட்டியிடத் தயாராகி வரரருகிறார் என தெரிய வந்துள்ளது. 

அதேவேளையில் காப்பார் தொகுதியில்  மஇகா மகளிர் தலைவர் டத்தோ மோகனா முனியாண்டி போட்டியிடக் கூடிய வாய்ப்பு இருப்பதாக ஏற்கெனவே ஆருடம் கூறப்பட்ட்டு வருகிறது. எனினும், ஆகக் கடைசி நிலவரப படி தேவமணியே காப்பாரில் போட்டியிடும் வாய்ப்பை பெறுவார் எனத் தெரிகிறது.

மேரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மூன்று வேட்பாளர்களின் பெயர்களை தேசிய முன்னணி தலைமைத்துவத்திடம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.

செமெந்தா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தகுதியுள்ள நால்வர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பின்னர், அவர்களில் சிறந்த வேட்பாளர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. செலாட் கிள்ளான் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மூன்று அம்னோ வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.