லண்டன், ஏப், 16- இங்கிலாந்தில் நடைபெறும் 25ஆவது காமன்வெல்த் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று லண்டன் சென்றடைந்தார் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்.

மலேசியப் பேராளர்கள் குழுவுக்கு தலைமையேற்றுள்ள டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைப் பிரதிநிதித்து சென்றுள்ளார்.

அந்த மாநாட்டின்போது அங்கு வருகை புரியும் உலகத் தலைவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச்சுகள் நடத்துவார். லண்டன் சென்ற டான்ஸ்ரீ விக்னேஸ்வரனை மலேசியத் தூதர் டத்தோ ரஷிடி ஹஸிஸி வரவேற்றார்.