காரில் வலம் வந்த ராட்சத நாய்; பயந்து போன மோட்டார் சைக்கிளோட்டி!- (video)

கோலாலம்பூர்,ஜன.12- “அலாஸ்கான் மலாமியூட்” என்ற இனத்தைச் சேர்ந்த நாய்கள் ஆட்களைக் காட்டிலும் பெரிதாக இருக்கும் என்பதால் அவை வீட்டிலேயே வைத்து வளர்க்கப்படும். உருவத்தில் பெரிதென்பதால் மக்கள் பயந்து விடுவார்கள் என்று இந்த வகை நாய்களை அவற்றின் எஜமானர்கள் வெளியில் கொண்டுச் செல்வதில்லை.

அதிலும், அவை ஒரு சாயலில் பார்க்க சைபிரிய புலிகள் போன்றே இருக்கும்.இப்பேற்பட்ட நாய்களை வெளியே கொண்டு சென்றால் என்ன ஆவது? மக்கள் பயந்து அலறி ஓடி விட மாட்டார்கள்?

ஆனால், அப்பேற்பட்ட நாய் ஒன்றை, நாய்கள் நடமாட்டமே காண முடியாத கிளந்தான், கோத்தா பாருவில் ஒருவர் காரில் வைத்து வலம் வந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.

அந்த நாய் கார் ஜன்னல் வழியே காட்சிகளை ரசித்தப்படியே அமர்ந்திருந்தது. ஜாலான் டூசுன் ராஜாவில் அக்காட்சியைப் பார்த்த ஒருவர் அதனை வீடியோ எடுத்துள்ளார். அப்போது அந்நாய் பயணிந்து வந்த கார் ஜாலான் டூசுன் ராஜாவில் உள்ள சமிக்ஞை விளக்கில் நின்றது.

சமிக்ஞை விளக்கில் கார்களை மோட்டார்சைக்கிள்கள் முந்திச் சென்று முன்னே நிற்பது வழக்கம்தானே. அது போலவே, மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் அந்நாய் இருக்கும் காரை முந்திச் செல்ல முற்பட்டபோது, நாய் தனது தலையை திடீரென வெளியே நீட்டவும், அந்த மோட்டார் சைக்கிளோட்டி பயந்தே போயிருக்கிறார். வந்த வேகத்தில் அவர் மீண்டும் மோட்டார் சைக்கிளை அதே வேகத்தில் ரிவர்ஸ் எடுத்திருக்கிறார்.

அதைப் பார்த்து அந்த வீடியோவைப் பதிவு செய்து கொண்டிருந்த நபர் வேகமாக சிரிக்கும் சிரிப்பொலியும் அந்த வீடியோவில் கேட்கும்.

ஆனால், அந்த நாயோ ஒன்றுமே தெரியாத அப்பாவி போல பார்க்கும் அந்த காணொளி பலரையும் கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post காரில் வலம் வந்த ராட்சத நாய்; பயந்து போன மோட்டார் சைக்கிளோட்டி!- (video) appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *