காலம் தாழ்த்தி வரக்கூடாது – நஜிப்பிற்கு நீதிபதி நினைவுறுத்தல்

கோலாலம்பூர், ஜூலை 18 – தமது வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது காலம் தாழ்த்தி நீதிமன்றத்துக்கு வரக்கூடாது என நீதிபதி முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை கண்டித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்துக்கு சரியான நேரத்தில் வர வேண்டுமென தாம் நினைவுறுத்துவதாக நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி குறிப்பிட்டார்.

பொறுமையுடனும் தேவைப்படும்போது மட்டுமே பேசக்கூடிய அவர், காலம் தாழ்த்தி வருவது நீதிமன்றத்தின் மற்ற அதிகாரிகளின் நேரத்தை வீணடிப்பதாக இருக்கும் என குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் நஜிப் இடைவேளக்குச் சென்று காலம் தாழ்த்தியும் பிற்பகலில் நேரம் கழித்து வந்ததை நீதிபதி பொருட்படுத்தவில்லை.

இன்று பொறுமை இழந்து, அது பற்றி அவருக்கு நினைவுறுத்தினார். நேற்று பிற்பகல் 12.50க்கு நீதிமன்றம் களைந்து இடைவேளைக்குப் பின்னர் பிற்பகல் 2.20 மணிக்கு மீண்டும் கூடியது.

நஜிப் நீதிமன்றத்தில் இல்லாததால், நீதிமன்றம் பிற்பகல் 2.40 மணிக்கே மீண்டும் தொடங்கியது.

இதனிடையே சாட்சியம் அளித்த யயாசான் ராக்யாட் 1மலேசியாவின் தலைமை செயல்முறை அதிகாரியான உங் சு லின், 2014 டிசம்பர் 26இல் முதலில் 27 மில்லியன் ரிங்கிட், பின்னர் 5 மில்லியன் ரிங்கிட், 2015 பிப்ரவரி 19இல் 10 மில்லியன் ரிங்கிட்டை நஜிப்பின் சொந்தக் கணக்கில் வரவு வைக்கும்படி நஜிப்பின் தனிப்பட்ட செயலாளர் அஸ்லின் கேட்டுக் கொண்டதாக நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

The post காலம் தாழ்த்தி வரக்கூடாது – நஜிப்பிற்கு நீதிபதி நினைவுறுத்தல் appeared first on Vanakkam Malaysia.