கிரேசி மோகனின் இறுதி நிமிடங்கள்.. உடனிருந்த சகோதரர் விளக்கம்!

பிரபல திரைப்பட நடிகரும், கதை ஆசியருமான மறைந்த கிரேசி மோகன் மரணத்தில் உள்ள யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது சகோதரர் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

கிரேசி மோகன் கடந்த யூன் 10ம் திகதி மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு சர்க்கரை, இரத்த கொதிப்பு போன்ற நோய்கள் இருந்ததாகவும், அதனால், தான் அவரை காப்பாற்ற முடியவில்லை, மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை போன்ற தகவல்கள் பரவியது.

இந்நிலையில், இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வகைக்கும் வகையில் மறைந்த கிரேசி மோகனின் சகோதரர் பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, அவர் வியாதி வந்து இறக்கவில்லை, அவரது மரணம் எதிர்பாராத விதமாக திடீரென ஏற்பட்டது. எங்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது.

10ம் திகதி காலையில் அவரை நான் சந்தித்தேன், அவர் வழக்கம் போல் சந்தோஷமாக தான் இருந்தார். அவருக்கு சர்க்கரை, இரத்த கொதிப்பு போன்ற எந்த நோயும் கிடையாது, தவறான தகவல்கள் பரவுகிறது.

வழக்கம் போல் காலை 9.15 மணிக்கு சாப்பிட்டார். 9.45 மணிக்கு அவர் என்னை போனில் தொடர்பு கொண்டார். பாலாஜி மூச்சு முட்டுகிறது, அடி வயிற்றில் வலிக்கிறது வரமுடியுமா என கேட்டார். உடனே நான் அவர் வீட்டிற்கு விரைந்து அவரை அழைத்துக்கொண்டு காவேரி மருத்துவமனைக்கு சென்றேன்.

அங்கு டாக்டர் சுரேஷ்குமார் மிகவும் சிறப்பாக சிகிச்சை அளித்தார். 10 மணிக்கு ஆரம்பமான சிகிச்சை 2 மணி வரை தொடர்ந்தது. அவரை காப்பாற்ற மருத்துவர்கள் முடிந்த வரை முயற்சி செய்தனர். ஆனால், மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிர் இழந்தார். இது விதி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

எனவே, அவருக்கு நோய் இருந்தது, அவரை சரியாக பார்த்துக்கொள்ளவில்லை, மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை போன்ற பொய்யான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளவதாக மறைந்த கிரேசி மோகனின் சகோதரர் பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *