கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் திருமலையில் போராட்டம்

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தினால் நியமனம் கோரி நேற்று (18) திருகோணமலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இம்முறை தொண்டர் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நியமனத்தின் போது உள்வாங்கப்படாத கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் இனத்தை சேர்ந்த 245 ற்கும் அதிகமான பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் ஆளுநர் செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருந்தனர்.

கடந்த 2018ம் ஆண்டு கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர் ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதாவது 2018ம் ஆண்டு இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் 2004 தொடக்கம் 2007 டிசம்பர் மாதம் வரை சேவையாற்றியவர்கள் மாத்திரம் உள்வாங்கப்பட்டனர்.

1999 தொடக்கம் 2006 வரை சேவை புரிந்தவர்களை கூட புரந்தள்ளி விட்டனர். யுத்தத்தின் போதும் இயற்கை அழிவுகளின் போதும் தமது சேவையினை தொடர்ந்த பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் தகுதி அடிப்படையில் உள்வாங்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாண பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் சங்கத்தினர் ஒவ்வொருவரையும் அழைத்து தொண்டர் ஆசிரியர்களின் புத்தக திரட்டு நேரசூசி சேவைக்கான கடிதம் என்பவற்றை பரிசீலனை செய்து நிரந்தர நியமனம் வழங்க கோரி கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு செயலாளர் ஊடாக கல்வி அமைச்சுக்கும் மகஜர் வழங்கிய நிலையில் அது தொடர்பாக ஆளுநர் செயலகம் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் அசமந்த போக்கில் செயற்படுகிறார்கள் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். (சூ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *