குணசேகரனுக்குச் சம்பள உயர்வை நிர்ணயிப்பீர்.

கோலாலம்பூர்.   செப் 21 கோலாலம்பூரில் மணிக்கூண்டு பராமரிப்பாளராக  பணியாற்றி ஓய்வு பெற்ற வி.குணசேகரனுக்கு பதவி உயர்வுக்கு ஏற்ப சம்பள விகிதத்தை   நிர்ணயிக்கும்படி கோலாலம்பூர் மாநகர் மன்றத்தை  கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் சமாட் பணித்துள்ளர்.

அதோடு குணசேகரனுக்கு பி பி ஆர் விடு கிடைப்பதற்கான ஏற்பாட்டையும் செய்யும்படி மாநகர் மன்றத் தை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
கோலாலம்பூர் சுல்தான் அப்துல் சமாட் கட்டிடத்தில் கடந்த 42 ஆண்டு காலமாக மணிக்கூண்டு பராமரிப்பாளராகப்பணியாற்றிய குணசேகரன்  ஓய்வு பெற்றார்
பணி ஓய்வு பெறுவதற்கு இரண்டு வாரத்திற்கு முன் பதவி உயர்வு கிடைத்தபோதிலும் அதற்கான ஊதிய சம்பள உயர்வு 10 வெள்ளி மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் ஊடகங்களில் வெளிவந்ததை தொடர்ந்துபதவி உயர்வுக்கு ஏற்ப குணசேகரனுக்கு சம்பள விகிதத்தை நிர்ணயிக்கும் படி கோலாலம்பூர் மாநகர் மன்றத் தை அமைச்சர் கேட்டுக்கொண்டார்
மேலும் 2014 ஆம் ஆண்டிலிருந்து பி.பி.ஆர் வாடகை வீட்டிற்கு  மனு செய்ததாகவும் ஆனால் அது கூட இன்னும் கிடைக்கவில்லை என்றும் குணசேகரன் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு பி.பி.ஆர். வீட்டை ஏற்பாடு செய்யும்படி கோலாலும்பூர் மாநகர மன்றத்திற்குக் காலிட் சமாட் உத்தரவிட்டார்.

The post குணசேகரனுக்குச் சம்பள உயர்வை நிர்ணயிப்பீர். appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *