குண்டு வெடிப்பால் – பெரும் பதற்றம்!!

சாவகச்­சேரி,  தனன்­க­ளப்பு பகு­தி­யில் நேற்று முற்­ப­கல் 11 மணி­ய­ள­வில் கிளை­மோர் குண்டு வெடிக்க வைக்­கப்­பட்­ட­போது பெரும் சத்­தம் ஏற்­பட்டு அதிர்ந்­த­தால் சாவ­கச்­சேரி நக­ரில் பதற்­றம் ஏற்­பட்­டது.

கடந்த மாதம் 21ஆம் திகதி, குண்­டு­வெ­டிப்­பால் உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­பட்ட நிலை­யில், எங்கு குண்டு வெடிக்­குமோ என்ற அச்­சத்­தில் வாழும் மக்­கள் நேற்று குண்டு வெடிக்­க­வைக்­கப்­பட்ட சம்­ப­வத்­தால் பெரும் பீதி­ய­டைந்­த­னர்.

சாவ­கச்­சேரி சந்­தைக்கு வந்­தி­ருந்த மக்­க­ளும் வியா­பா­ரி­க­ளும் வர்த்­த­கர்­க­ளும் குழப்­பத்­தில் காணப்­பட்­ட­னர்.

இது தொடர்­பாக விசா­ரித்த போது, மீட்­கப்­பட்ட குண்டை வெடிக்­க­வைத்­த­போது ஏற்­பட்ட சத்­தம் என்று கூறப்­பட்­டது.

தனன்­க­ளப்பு காற்­றாலை அமைக்­கும் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் கிளை­மோர் குண்டு காணப்­பட்­டதை மக்­கள் அவ­தா­னித்து சாவ­கச்­சே­ரிப் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­த­னர். பொலி­ஸார் அங்கு பாது­காப்பு ஏற்­ப­டுத்தி சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் நேற்று அறிக்கை தாக்­கல் செய்­தி­ருந்­த­னர்.

சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் மூல­மாக குண்டை அகற்­றிச் செய­லி­ழக்­கச் செய்­யு­மாறு நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.

அதை­ய­டுத்து கிளை­மோர் குண்டு செய­லி­ழக்க வைக்­கப்­பட்­டது. என்று தெரி­விக்­கப்­பட்­டது. அதன் பின்­னரே மக்­க­ளும் வியா­பா­ரி­க­
ளும் வர்த்­த­கர்­க­ளும் நிம்­ம­திப் பெரு­மூச்சு விட்­ட­னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *