குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்த தந்தை: தண்ணீரிலேயே மாரடைப்பால் மரணம்

ஆசிரியர் – Editor II

மெரினா நீச்சல் குளத்தில் குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்த தந்தை மாரடைப்பால் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மண்ணடியை சேர்ந்தவர் சபியுல்லா (38). இவர் தனது குழந்தைகளை இன்று காலை மெரினா நீச்சல் குளத்துக்கு அழைத்து வந்த நிலையில் குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்துக்கொண்டே அவரும் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது சபியுல்லாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் நெஞ்சைப்பிடித்துக் கொண்டே தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தார்.

இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு முதலுதவி செய்தனர்.

ஆனால் மாரடைப்பு மற்றும் தண்ணீரில் மூழ்கியதால் அவர் உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது.

உயிரிழந்த சபியுல்லாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading...