குழந்தை பருவத்திற்குத் திரும்பிய 24 வயது இளைஞன்

தெற்கு அமெரிக்கா, ஜூலை 12 – 24 வயதான புகைப்படக் கலைஞர் ஒருவர் ஆன்லைன் மூலம் வாங்கப்பட்ட குழந்தைகள் பயன்படுத்தும் ‘டயப்பர்’ அணிந்து, மீண்டும் தனது குழந்தை பருவ வாழ்க்கையைத் வாழ்கிறார்.

டேவிட் என்று அழைக்கப்படும் அப்புகைப்படக் கலைஞர், ஐந்து வயதில் தனது குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பின்னர், இழந்த தன் குழந்தை பருவ வாழ்க்கையை மீண்டும் பெற, கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘டயப்பர்’ காதலரானார்.

டேவிட் அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் வசித்து வருபவர். குழந்தை உணவை சாப்பிடுவது, கார்ட்டூன்களைப் பார்ப்பது மற்றும் பொம்மைகளுடன் விளையாடுவது போன்றவற்றை மூலம் தனது குழந்தை பருவத்தில் நிகழ்ந்த தாக்கத்திலிருந்து வெளியேற முடிகிறது என கூறிப்பிட்டுள்ளார்.

அவர் 13 ஆண்டுகளாக ஒரு நற்பண்புள்ள வீட்டில் வசித்து வந்ததாகவும் மற்ற குழந்தைகளைப் போல தனது வாழ்க்கை அமையவில்லை எனவே இப்போது அதை உணர விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.

மேலும், அவர் ஐந்து வருடங்களாக ஒரு குழந்தையைப் போல முயற்சித்த பிறகு, அந்த வாழ்க்கையைக் காதலிக்க ஆரம்பித்ததாகவும் கூறினார்.

வீட்டிலிருந்து 3 டி எடிட்டராகவும் இல்லஸ்ட்ரேட்டராகவும் பணியாற்றி வரும் டேவிட், தனியுரிமையில் தனது கடந்த காலத்தை அனுபவிக்க அவருக்கு சுதந்திரம் உள்ளதாக உணருகிறார்.

The post குழந்தை பருவத்திற்குத் திரும்பிய 24 வயது இளைஞன் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *