கேமரன் மலையில் தேர்தல் குற்றங்களா? உடனே போலீஸ் புகார் செய்க! – ஆணையம்

Please log in or register to like posts.
News

கோலாலம்பூர், ஜன.12- கேமரன் மலைத் தொகுதி இடைத் தேர்தலின் போது தேர்தல் குற்றங்கள் ஏதும் நிகழ்வது குறித்து ஆதாரப் பூர்வமான விவரங்களை வைத்துள்ளோர், அது குறித்து உடனடியாக போலீஸ் புகார் செய்யுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், ஆதாரப்பூர்வம் இல்லாமல், யாரும் யார் மீது எவ்வித போலீஸ் புகாரையும் கொடுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அஸார் அஸிஸான் ஹரூண் கூறினார்.

“வேட்பாளர்கள் மற்றும் பிரச்சாரங்கள் ஈடுபடுபவர்கள், சட்டத்தை தயவு செய்து பின்பற்ற வேண்டும் என்று மட்டும் தான் தேர்தல் ஆணையத்தால் கூற முடியும். வேட்பாளர்கள் மற்றும் பிரசாரங்களில் ஈடுபடுபவர்களை விசாரணை செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

கேமரன் மலைத் தொகுதி இடைத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவு வழங்காவிடில், போஸ் பெதாவ் பூர்வ குடிமக்கள் கிராம மக்களுக்கு சம்பளப் பணம் வழங்கப் படாது என்று அந்தக் கிராமத் தலைவரை, பூர்வ குடியினரின் செனட்டர் போப் மனோலான் முகமட் மிரட்டியதாக வெளியிடப் பட்ட தகவல் குறித்து கருத்துரைக்கையில், அஸார் அவ்வாறு சொன்னார்.

அத்தொகுதிக்கான இடைத் தேர்தலின் போது இவ்வாறான தேர்தல் குற்றங்கள் நிகழும் பட்சத்தில், அது குறித்து உடனடியாக போலீஸ் புகார் செய்யப் பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

“ஆதாரங்கள் இல்லாமல் செய்யப்படும் புகார்கள் மீது பெரிதாக நடவடிக்கை எடுக்கப் படாது. இதனிடையில், தேர்தல் குற்றங்கள் தங்களின் கண் முன்னிலையில் நிகழும் பட்சத்தில், தேர்தல் கண்காணிப்பாளர்கள், அது குறித்து வேட்பாளர்கள் மற்றும் பிரச்சாரம் செய்பவர்களுக்கு அறிவுரை வழங்கலாம்” என்று அஸார் கூறினார்.

The post கேமரன் மலையில் தேர்தல் குற்றங்களா? உடனே போலீஸ் புகார் செய்க! – ஆணையம் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *