கேமரன் மலை: கேவியஸ் போட்டி இல்லை; பக்காத்தானுக்கு ஆதரவு!

Please log in or register to like posts.
News

கேமரன் மலை,ஜன.12- இன்று கேமரன் மலையில் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட மைபிபிபி தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் கடைசி நேரம் வரை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மாறாக, அவர் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார் என்று உத்துசான் செய்தி ஒன்று கூறுகிறது.

கேமரன் மலை இடைத் தேர்தலை முன்னிட்டு இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலுக்கு கேவியஸ் காலையிலேயே வந்து விட்டார்.

கடந்த வாரம் அறிவித்திருந்தது போல அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யத்தான் வந்திருக்கிறார் என்று எல்லோரும் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஆனால், கடைசி நேரத்தில் தாம் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக கேவியஸ் அறிவித்தார். பக்காத்தான் ஹராப்பானுக்கும் தேசிய முன்னணிக்கும் இடையில் நியாயமான போட்டி நிலவ வழி விடும் வகையில் தாம் இந்த முடிவஈ எடுத்ததாக அவர் கூறினார்.

எனினும், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ரம்லிக்கு ஆதரவு வழங்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

The post கேமரன் மலை: கேவியஸ் போட்டி இல்லை; பக்காத்தானுக்கு ஆதரவு! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *