கேலிச் சித்திர புத்தகம்: பிரதமர் சம்பந்தப்படவில்லை

கோலாலம்பூர், அக். 19 – பெல்ட் அன்ட் ரோட் எனும் கேலிச் சித்திர புத்தக வெளியீட்டுக்கும் பிரதமர் துன் மகாதீருக்கும் சம்பந்தம் இல்லையென அறிவிக்கபட்டுள்ளது.

பிரதமர் துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அந்தக் கேலிச் சித்திர புத்தகம் சம்பந்தமான வதந்தி பற்றித் தெரிய வந்ததாகவும் அதில் அந்தப் புத்தகம சீன அதிபர் சி ஜிபிங்கிற்கு அளிக்கப் பட்டதாகக் குறிப்பும் இடம் பெற்றிருந்தது. அப்புத்தகம் பெல்ட் அண்ட் ரோட் மாநாட்டில் சீன அதிபருக்கு அளிக்கப்பட்டதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

டாக்டர் மகாதீர் அந்தப் புத்தகத்தில் தமது புகைப்படம் இடம்பெறவும் பள்ளிகளில் விநியோகம் செய்ய அனுமதி அளிக்க வில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இந்த விவகாரம் விசாரிக்கப்படுவதாக உள்துறை அமைச்சு, விநியோகம் செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தது.

The post கேலிச் சித்திர புத்தகம்: பிரதமர் சம்பந்தப்படவில்லை appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *