கைவிலங்கு வடிவில் மோட்டார் சைக்கிள் பூட்டு- இருவர் கைது!

குவாலா பிலா, மே.24 – முக நூலில் சட்டவிரோதமாக கை விலங்கை விற்பனை செய்ததற்காக இரண்டு ஆடவர்களை போலீசார் கைது செய்தனர்.
நேற்று, மெலாங் எனும் இடத்தில் அந்த இரு ஆடவர்களையும் போலீசார்  கைது செய்தனர். 21 மற்றும் 24 வயதுடைய அந்த ஆடவர்கள், ஒருவர் பொருளை அனுப்புவதும் மற்றொருவர் அதனை  விற்பனை செய்யும் வேலை செய்வதாக குவாலா பிலா மாவட்ட போலீஸ் அதிகாரி ஹஸ்லா பாசோக் தெரிவித்தார்.  அதனுடன், 20 ஜோடி கை விலங்குகளை சாவியுடம் கைப்பற்றினர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் மோட்டார் சைக்கிளின் பூட்டுதான், கை விலங்கு போல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவந்துள்ளது. மேலும்,  அந்த இருவரும் 22 வயதுடைய இன்னொரு ஆடவர் மூலம் பெர்லிஸிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டு, இந்த விற்பனை தொழிலை செய்து வந்ததாக தெரிய வந்துள்ளது.

ஒரு ஜோடி கை விலங்கு, ரிம. 120-க்கு விற்கப்பட்டதாக  ஹஸ்லா பாசோக் கூறினார். அந்த வகையில், கடந்த இரண்டு மாதம் சுமார்  60 ஜோடி கை விலங்குகளை விற்று, ரிம 2,500  சம்பளம் பெற்றுள்ளனர்.
அதன் பின்பு, முகநூலில் விளம்பரம் செய்து, பொருளை தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டும் என்று அந்த நிறுவனத்தின் ‘ஏஜென்’ கூறியதாக சம்பந்தப்பட்ட அந்த இரு ஆடவரும்  போலீசாரிடம் ஒப்புவித்தனர்.

எனினும், காவல் துறை சம்பந்தப்பட்ட எந்த பொருளும் பொது மக்களிடம் இருந்தால், அது குற்றமே. ஆகையால், இச்சம்பவம் தொடர்பாக, காவல் துறை சட்டம் அடிப்படையில், செக்‌ஷன் 89 கீழ் இருவரையும் கைது செய்து, நான்கு நாள்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

The post கைவிலங்கு வடிவில் மோட்டார் சைக்கிள் பூட்டு- இருவர் கைது! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *