கொடூர தாய்… 5 வயது மகனால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!

கர்நாடக மாநிலத்தில் 1 வயது மகளை ஆற்றில் தூக்கிப் போட்டுக் கொன்ற தாய் தனது 5 வயது மகனின் வாக்குமூலத்தால் காவல் துறையினரிடம் சிக்கினார்.

உடுப்பி மாவட்டம் குந்தபூர் நகரை அடுத்த யதாமோகே கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா. இவர் காவல்துறையில் அளித்த புகாரில் கடந்த11-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் தனது வீட்டில் புகுந்த மர்ம நபர் தன் அருகே உறங்கிக்கொண்டிருந்த தனது 1 வயது மகள் சன்வீகாவை தூக்கிக் கொண்டு ஓடிவிட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து மர்ம நபரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். இந்நிலையில் ரேகாவின் 5 வயது மகன் சாத்விக்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளியாகின. தனது தாய் தான் தன்னை ஆற்றில் குதிக்கச் சொல்லி கட்டாயப் படுத்தியதாகவும், அதற்கு மறுத்து தான் அழுத நிலையில் தன்னை ஊர்மக்கள் வந்து காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளான்.

ஆனால் ஊர்மக்கள் வரும் முன்பே ரேகா தனது மகளை ஆற்றில் தூக்கிப் போட்டுவிட்டதால் அது ஊர் மக்களுக்குத் தெரியவில்லை. இதையடுத்து தான் கடத்தல் நாடகமாடியதை ரேகா ஒப்புக் கொண்டார்.

காரணம் இதுதான் ரேகாவின் மாமியார் கொடுமையால் ரேகாவின் குடும்ப வாழ்க்கை முடிவுக்கு வரும் நிலையில் இருந்தது. விரக்தியடைந்த தருணத்தில் குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த ரேகா, தனது மகன் அழுததால் ஊர்மக்களால் காப்பாற்றப்பட்டார்.

இந்த விவகாரம் பக்கத்து ஊரில் இரவுக் காவலாளியாக வேலை பார்க்கும் ரேகாவின் கணவன் சந்தோஷுக்கு தெரியவந்தபோது அவர் துயரத்தில் துடித்தார். தற்போது ரேகா சட்டத்தின் தண்டனைக்காக காத்திருக்கும் நிலையில் அவரது மாமியார் குற்றமற்றவராகவே சுற்றி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *