கொலை மிரட்டலில் இளவரசி கேத்; அதிகாரிகள் கலக்கம்!

லண்டன், ஜன.14- பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளக திடுக்கிடும் தகவல் வெளியானது.

இந்தத் தகவலை அடுத்து அரண்மனையில் கடும் கட்டுபாடுகளை விதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புகள் பொதுவாக பயன்படுத்தும் டெலிகிராம் செயலி வழியாக கேத் மிடில்டன் மீதான அச்சுறுத்தல் தகவல் பிரசுரிக்கப் பட்டுள்ளது.

அதில் கேத் மிடில்டனை உணவில் விஷம் வைத்து கொல்ல இருப்பதாக தெரிவித்து உள்ளனர். அது மட்டுமின்றி அவர் உணவுப் பொருட்களை வாங்கும் வணிக வளாகம் எது என்பது போன்ற தகவல்களையும் பகிர்ந்துள்ளனர்.

அந்தத் தகவலை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ள பிரிட்டன் உளவு அதிகாரிகள்,அது தொடர்பில் முக்கிய தகவல் ஒன்றையும் பகிர்ந்துள்ளனர்.

பொதுவாக ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பானது தங்கள் திட்டம் தொடர்பில் பகிரப்படும் தகவல்களை குறிப்பிட்ட மணித் துளிக்குள் அழித்து விடுவர்.

தற்போது கேத் மிடில்டன் தொடர்பான தகவலையும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அழித்திருப்பது பிரிட்டன் அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பிரிட்டன் அரண்மனையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post கொலை மிரட்டலில் இளவரசி கேத்; அதிகாரிகள் கலக்கம்! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *