கொழும்பில் தொடரும் பதற்றம்! நட்சத்திர ஹோட்டல்களிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள்

கொழும்பு, ஏப்.21- கொழும்பில் அமைந்துள்ள முக்கிய நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து ஆட்கள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் சங்கரிலால்,சின்மன் மற்றும் கிங்ஸ்பெரி ஆகிய ஹோட்டல்களில் வெடிப்பு சம்பவங்கள் இன்று காலை பதிவாகியுள்ளன. இந்நிலையில் குறித்த நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து ஆட்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.

குண்டு வெடிப்பின் எதிரொலி நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!

நாட்டில் ஏற்பட்டுள்ள தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து  இரு நாட்களுக்கு பள்ளிகள் அனைத்தும் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

The post கொழும்பில் தொடரும் பதற்றம்! நட்சத்திர ஹோட்டல்களிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *