கோடீஸ்வரர் ரத்தன் டாடா, 4 முறை காதலில் ‘கோட்டை’ விட்டார்!

புது டில்லி. ஜன.14- இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனமான டாடாவை பல பல ஆண்டுகளாக நிர்வகித்தவர் ரத்தன் நெவல் டாடா. மிகப் பெரிய கோடீஸ்வரரான ரத்தன் டாடா ஏன் திருமணமே செய்து கொள்ளவில்லை என்று பார்த்தால் பிண்ணனியில் ஏகப்பட்ட சோகம்.

அவர் தலைவராக இருந்து காலத்தில் தான் டாடா நிறுவனம் பல ஏற்றங்களைக் கண்டது. தற்போது இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கும் மேல்.

1937 ஆம் ஆண்டு பிறந்த ரத்தன் டாடாவின், இளமைக் காலம் சோகம் நிறைந்ததது. 1940 ஆம் ஆண்டு ரத்தனின் தந்தை நெவல் ஹோம், தயார் சூனாவை விவாகரத்து செய்தார். இதனால் ரத்தன் பாட்டியிடம் வளர்ந்தார்.

தொழிலில் கொடி கட்டிப் பறந்த ரத்தன் நெவல் டாடாவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சியான ஒன்றாக அமையவில்லை. காதலித்த 4 பெண்களையும் வெவ்வேறு காரணங்களால் அவரால் கரம் பிடிக்க முடியாமல் போனது.

இந்தியா- சீனா போரும் ரத்தன் திருமணம் நடக்காததற்கு ஒரு காரணமாக இருந்துள்ளது. அமெரிக்காவில் படித்த ரத்தன் அங்கேயே ஐபிஎம் நிறுவனத்தில் சிலகாலம் பணி புரிந்தார்.

அப்போது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவரை விரும்பியுள்ளார். 1962ஆம் ஆண்டு அவரை வளர்த்த பாட்டியின் உடல்நிலை மோசமானதால் ரத்தன் இந்தியா திரும்பினார்.

தன்னைத் தொடர்ந்து அந்தப் பெண்ணையும் இந்தியாவுக்கு வருமாறு ரத்தன் அழைத்தார். இச்சமயத்தில் இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. அமெரிக்க ஊடகங்கள் பெரும் போராகச் சித்தரித்து செய்திகள் வெளியிட்டு வந்தன.

இதனால் பயந்து போன அமெரிக்கப் பெண் ரத்தனை திருமணம் செய்ய மறுத்துள்ளார். பின்னர் அவர் அமெரிக்காவில் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கி விட்டார்.  ரத்தனின் முதல் காதல் இப்படிதான் தோல்வியில் முடிந்தது.

திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என்ற கேள்விக்கு நான்கு முறை திருமணம் கைக்கூடியதாகவும் ஏதோ ஒரு காரணமாக திருமணம் தடைப்பட்டதாகவும்  சி. என். என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் ரத்தன் டாடா குறிப்பிட்டுள்ளார்.

The post கோடீஸ்வரர் ரத்தன் டாடா, 4 முறை காதலில் ‘கோட்டை’ விட்டார்! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *