கோமாவில் பெண் கர்ப்பம்:  யார் காரணம்? ஆண் ஊழியர்களிடம் டி.என்.ஏ.சோதனை!

வாஷிங்டன்,ஜன.11- அமெரிக்காவில் 14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்மணி கர்ப்பம் அடைந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்கப் போலீஸ் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த அனைத்து ஆண் ஊழியர்களிடமும் டி.என்.ஏ. எனப்படும் மரபணுச் சோதனை நடத்துகின்றனர்.

இந்த விவகாரத்தில் முதற் கட்ட விசாரணையில் அந்தப் பெண்மணி பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் பட்டிருப்பதாக என்ற தகவல் வெளியானது.

அமெரிக்காவில் தென்மேற்கு மாநிலமான அரிசோனாவிலுள்ள ஹசியெண்டா என்ற மருத்துவப் பராமரிப்பு மையத்தில் 14 ஆண்டுகளாக சுய நினைவின்றி இருந்த அந்த பெண்ணை யாரோ பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாலேயே அவர் கர்ப்பமுற்றார். பின்னர் ஓர் ஆண் குழந்தைக்கும் அவர் தாயானார்.

அதனால் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து ஆண்களின் டி.என்.ஏ வையும் சேகரித்து அந்த குழந்தையின் டி.என்.ஏ.வோடு ஒப்பிட்டு குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில் அந்தக் குழந்தைக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் பொறுப்பெடுத்துக் கொண்டதாகவும் அந்த ஆண் குழந்தைத் தங்கள் குடும்பத்தில் ஒருவனாக நன்றாக கவனிக்கப்படுவான் என்று அவர்கள் தெரிவித்தாகவும் போலீசார் கூறினர்.

The post கோமாவில் பெண் கர்ப்பம்:  யார் காரணம்? ஆண் ஊழியர்களிடம் டி.என்.ஏ.சோதனை! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *