கோர விபத்து : குடும்பஸ்தர் பலி! மனைவி வைத்தியசாலையில்…

தலை மன்னார் பிரதான வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கணவன், மனைவி மீது அதே வீதியில் வந்த கனரக வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மன்னார் – தலை மன்னார் பிரதான வீதி, புதுக்குடியிறுப்பு சந்தி கோணர் பண்ணை வீதியில் இன்று (17) மதியம் இடம் பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளதோடு, அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மன்னார் ஆண்டாங்குளம் – ஆக்காட்டி வெளி கிராமத்தை வதிவிடமாகவும், மன்னார் சாந்திபுரம் கிராமத்தை வதிவிடமாகவும் கொண்ட தனியார் பேரூந்தின் உரிமையாளரான வி.விமலதாசன் (49) என தெரிய வருகின்றது.

குறித்த குடும்பஸ்தர் மன்னாரில் இருந்து தலை மன்னார் நோக்கி தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, தலை மன்னாரில் இருந்து மன்னார் நோக்கி பொருட்களுடன் பயணித்த வாகனம் ஒன்று குறித்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுடன் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *