கோறளைப்பற்று மத்தி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் 2019ஆம் வருடத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வழுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் கேட்டு அறியப்பட்டதுடன், அவைகளுக்கு தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.

இவ்வருடம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் ஊடாக 314 வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வேலை திட்டங்களுக்காக அரசாங்கத்தினால் 136.71 மில்லியன் ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மக்கள் நல அபிவிருத்தி வேலைத் திட்டங்களை துரிதமாக மேற்கொள்ளுமாறு அரச அதிகாரிகளுக்கு இணைத் தலைமைகளினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.முஸம்மில்;, பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பிரதேசத்தின் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர். (கு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *