சத்தியராஜின் மகள் குறித்த வதந்தி???

நடிகர் சத்தியராஜன் மகன் திவ்யா இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி அரசியல் ரீதியான வதந்திகளை கிளப்பியுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா, அட்சய பாத்திரம் என்ற அறக்கட்டளை மூலம், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை சமீபத்தில் தொடங்கி வைத்தார்.

நாடாளுமன்ற தேர்தல் ஒருமாதத்தில் வரும் நிலையில், திவ்யா திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானதையடுத்து, இவர் திமுக கட்சியில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள திவ்யா, ஒரு ஊட்டச்சத்து நிபுணராக எனது தொழில் மற்றும் தமிழகத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்து வளர்ச்சி குறித்தும் திமுக தலைவரிடம் கலந்துரையாடினேன்.

மற்றபடி வேறொன்றும் இல்லை என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *