சய்டம் குறித்த அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு வரவேற்பு

ஆசிரியர் – Editor II

சய்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் கற்கின்ற மாணவர்களை அவர்களின் தகுதிகளுக்கு அமைவாக கொத்தலாவல வைத்திய பீடத்திற்கு சேர்ப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை வரவேற்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பாக எடுக்கவுள்ள அடுத்த கட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக அரசாங்கம் தௌிவுபடுத்த வேண்டும் என்று அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே கூறினார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

இந்த தீர்மானத்தை ஏற்கனவே எடுக்க வேண்டிய கட்டங்களையும் தாண்டி வந்து இறுதித் தருணத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இந்த கொள்கைத் தீர்மானத்தை நடைமுறை ரீதியில் செயற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்க தரப்பு வௌியிட வேண்டும் என்றும் வைத்தியர் ஹரித அலுத்கே கூறினார்.

Loading...