சர்கார் படத்துக்கு டப்பிங் பேசும் விஜய்

Please log in or register to like posts.
News

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விஜய் தனது போர்ஷனுக்கான டப்பிங் பணிகளை இன்று துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Vijay #Sarkar

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் `சர்கார்’. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். 

படம் தீபாவளிக்குப் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கான வேலைகளை விறுவிறுப்பாக செய்து வருகிறது படக்குழு. சென்னை அருகே கிழக்கு கடற்கைரை சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. 

அங்கு முக்கிய காட்சிகளை முடித்த பிறகு, இந்த மாத இறுதியில் படக்குழு லாஸ் வேகாஸ் செல்கிறது. அங்கு பாடல் காட்சிகளைப் படமாக்க இருக்கின்றனர். ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்கள் வரை அங்கு படப்பிடிப்பு நடைபெறுகிறது. 

இந்த நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய டப்பிங் பணிகளை இன்று தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லாஸ் வேகாஸ் கிளம்புவதற்குள் தன்னுடைய போர்‌ஷனுக்கு டப்பிங் பேசி முடித்துவிடத் விஜய் திட்டமிட்டுள்ளாராம். முழு படப்பிடிப்பும் முடிந்த பிறகு விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. #Vijay #Sarkar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *