சவூதியில் குவியும் அமெரிக்க படைகள்: பதற்றத்தில் மத்திய கிழக்கு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான போருக்கு தயாராகி வருவதால் அமெரிக்க படைகள் எண்ணிக்கைகள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்படுகின்றனர்.

மத்திய கிழக்கு நாடான ஈரானுடன் மோதலுக்கு தயாராகும் வகையில் சுமார் 500 படைகளை, சவூதி இளவரசர் சுல்தான் விமான தளத்திற்கு அனுப்புகின்றனர்.

ஈரானிய ஏவுகணைகள் இப்பகுதியைத் தாக்க வாய்ப்பில்லை என்பதால் படைகள் தொலைதூரத்தில் உள்ள பாலைவன விமான தளத்திற்கு அனுப்பப்படுவதாக கூறப்பட்டுகிறது. அடுத்த வார தொடக்கத்தில் சவுதி அரேபியாவுக்கு, அமெரிக்க படையினர் அனுப்பப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் பதட்டங்கள் தொடர்ந்து வருவதால் பென்டகன் அதிகாரிகள் இப்பகுதியில் அதிக படைகளை விரும்புகிறார்கள் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.

மத்திய கிழக்குக்கில் மேலும் 1,000 படைகள் அனுப்பப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறிய ஒரு மாதத்திற்குப் பிறகு, தற்போது இந்த அறிவிப்பு வந்துள்ளது, ஆனால், அவர்கள் எங்கு அனுப்பப்படுவார்கள் என்று குறிப்பிடவில்லை.

ஜூன் மாத இறுதியில் மற்றும் இந்த மாத தொடக்கத்தில் சவூதி பிராந்தியத்தில் எடுக்கப்பட்ட படங்களின் மூலம், அப்பகுதியில் போருக்கான தயாரிப்புகளை மேற்கொள்வதைக் காட்டுகின்றன.

பாரசீக வளைகுடாவிலும் அதற்கு அப்பாலும் அரங்கேறிய தொடர்ச்சியான சம்பவங்களைத் தொடர்ந்து ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே பதட்டங்கள் வெடித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *