சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #GalaxyM #smartphone

சாம்சங் நிறுவனம் 2019 புத்தாண்டை புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வுடன் வரவேற்க இருப்பதாக தெரிகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இணையத்தில் அதிகம் லீக் ஆகிவரும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் பல்வேறு அம்சங்கள் உலகில் முதல் முறை வழங்கப்படுவதாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்களில் என்ட்ரி-லெவல் மற்றும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்கள் முறையே கேலக்ஸி ஜெ மற்றும் கேலக்ஸி ஆன் சீரிஸ் மாடல்களுக்கு மாற்றாக அமையும் என தெரிகிறது.

ஜனவரி 2019 நெருங்கி வரும் நிலையில், சாம்சங்கின் நொய்டா தயாரிப்பு ஆலையில் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் உற்பத்தி துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

புகைப்படம் நன்றி: Concept

சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

ஏற்கனவே வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்30 என மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கேலக்ஸி எம்50 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியானது. 

புதிய ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி எம்1, கேலக்ஸி எம்2, கேலக்ஸி எம்3 மற்றும் கேலக்ஸி எம்5 என்ற பெயர்களில் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் இவற்றில் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 7885 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என தகவல் வெளியானது. 

கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000, கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன் ரூ.15,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனில் அந்நிறுவனத்தின் புதிய இன்ஃபினிட்டி யு ரக நாட்ச் வழங்கப்படலாம்.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *