சாலை விபத்தில் இந்திய ஆடவர் பலி !

ஈப்போ ஜூன் 13 – இங்கு நிகழ்ந்த சாலை விபத்தில் சுங்கை சிப்புட் தாமான் லிந்தாங் எனும் இடத்தைச் சேர்ந்த வி. சேகர் ( வயது 54), என்பவர் மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று காலை 7.15 மணியவில் ஜாலான் லகாட் எனும் இடத்தில் நிழ்ந்தது என்று மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் அலி தம்பி தெரிவித்தார்.

லோரி ஓட்டுனரான இவர் சாலையை கடக்க முயன்றபோது பத்துகாஜாவிலிருந்து ஈப்போவை நோக்குச் சென்ற மைவி ரக கார் ஒன்றினால் மோதப்பட்டார்.

கடுமையான காயங்களுக்குள்ளான வி. சேகர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்தார் . சடலம் பின்னர் சவபரிசோதனைக்கு ராஜா பெர்மைசூரி பைனும் மருத்துவ மனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

இதில் கார் ஓட்டுனரான 28 வயது மாது காயம் இன்றி உயிர்தப்பியுள்ளார் .

The post சாலை விபத்தில் இந்திய ஆடவர் பலி ! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *